அமெரிக்க பல்கலைக்கழகத்தில் தீவிரவாத தாக்குதல்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க பல்கலைகழகம் ஒன்றில் குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலில் பல்கலைகழத்தின் கட்டிடத்தை தாக்கியதாகவும், துப்பாக்கி ஏந்திய நபர் சுடும் சப்தமும் கேட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கித் தாக்குதலால், பல்கலைகழகத்தின் மதில் சுவர், வெடிச் சத்தத்தில் அதிர்ந்தது, தாக்குதல்தாரி அதிரடியாக உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியபோது பல மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளே இருந்தனர்.
சம்பவ இடத்தில் சில பேர் கொல்லப்பட்டதாகவும் அல்லது காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றவர்கள் உள்ளே மாட்டிக்கொண்டனர். மேலும் சிலர் அறைகளில் பதுங்கிக்கொண்டனர்.
மேலும், இது ஒரு கடினமான தாக்குதல் என பொலிஸார் விவரித்துள்ளனர். மேலும் சிறப்பு படைகளை அனுப்பியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த பல்கலைக்கழகத்தில் பிற வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டு படிக்கும் பகுதி நேர மாணவர்களும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW