போகிமேன் கோ விளையாட்டிற்கு தடை!
இரவு பகல் பாராமல் உணவு, உறக்கமின்றி பலர் இந்த விளையாட்டிற்கு அடிமையாகிக் கொண்டிருக்கின்றனர்.
கையில் கைத்தொலைப் பேசியுடன் எல்லா இடங்களிலும் போகிமேன் கோ வேட்டையில் மக்கள் இறங்கியுள்ளனர்.
இதேவேளை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், வழிப்பாட்டு தளங்கள், காவல் நிலையங்கள் ஆகிய எல்லா இடங்களில் போகி மேனை தேடி அலைவதால் அவர்கள், பிறருக்குத் தொந்தரவை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் அரசு அலுவலகங்களில் போகிமேன் கோ விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அலுவலக நேரங்களில் போகிமேன் கோ கூடாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போகிமேன் கோ விளையாட்டில் இருந்து அரசு அலுவலகங்களின் இடங்களை நீக்குமாறு அந்நாட்டின் சிவில் சேவை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
இது வேலையை பாதிக்கிறது. ஊழியர்கள் தங்களது வேலைகளை முழுமையாக செய்ய முடிவதில்லை என்று அந்நாட்டின் பொது உதவி மற்றும் கமிஷன் தகவல் அதிகாரி மரியா லுசா அகமதா கூறியுள்ளார்.
போகிமேன் கோ விளையாட்டிற்கு தடை விதிக்கும் முடிவை வியட்நாம் மற்றும் தாய்லாந்து நாடுகள் எடுத்துள்ளன. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW