பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தவுடன் சென்றால் எதிர்காலம் இல்லை: பொதுச்செயலாளர் முள்ளிநியூஸ்

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தவுடன் சென்றால் எதிர்காலம் இல்லை: பொதுச்செயலாளர்


பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தவுடன் செல்லும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஏனெனில், இந்த நாட்டின் நீதிக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி ஒருவர் மீண்டும்ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படமாட்டார் என்றும் எனவே, அவ்வாறானவர்கள் பின்னால் சென்றால் எமது அரசியல் பயணம் கேள்விக்குறியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எமக்கு மஹிந்தவுடன் எவ்வித பிரச்சினைகளும் இல்லை.

ஆனால் அவருடன் இணைந்துஅரசியலில் பயணிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW