பேத்தியின் பிறந்த தினத்திற்காக கசிப்பு தயாரித்தவர் அலவத்துகொடை பொலீஸாரால் கைது முள்ளிநியூஸ்

பேத்தியின் பிறந்த தினத்திற்காக கசிப்பு தயாரித்தவர் அலவத்துகொடை பொலீஸாரால் கைது




தனது பேத்தியின் பிறந்த தினத்திற்காக கசிப்பு தயாரித்த 51 வயதுடைய பாட்டனை அலவத்துகொடை பொலீஸார் கைது செய்துள்ளனர்.

பொலீஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின்படி விசாரணைகளை மேற்கொண்ட பொலீஸார், கண்டி அலவத்துகொடை பிரதேசத்தில் கசிப்பு தயாரித்துக் கொண்டிருந்த இச் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் அவரிடம் வினவிய போது தனது மகளது புதல்வியின் (பேத்தியின்) பிறந்த தின கொண்டாட்டத்திற்காக கசிப்பு தயாரித்தகாக பொலீஸாரிடம் கூறியுள்ளார்.

இவரிடம் இருந்து 375 மில்லிலீட்டர் கசிப்பும், கசிப்பு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் பொலீஸார் கைப்பற்றி உள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று 24 ம் திகதி கண்டி நீதவான் முன் ஆஜர் செய்ய உள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW