ரங்கா ஐரோப்பிய நாடுகளில் தலைமறைவு!

மகிந்த ராஜபக்சவின் சகாவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிறி ரங்கா இலங்கையை விட்டு வெளியேறியுள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது.
தற்போது ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக வாழ்ந்து வருவதாகவும் அறியமுடிகின்றது.
இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நேரத்தில் இவரினால் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். அந்த விபத்து மகிந்தவின் ஆட்சியின் போது இரகசியமாக மூடப்பட்டிருந்தது.
எனினும் தற்போது ஆட்சிபுரியும் நல்லாட்சி இவரின் பைல்களை தூசுதட்டியுள்ளது.
இவர் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கைது செய்யப்படவுள்ளார் என்ற செய்தி அரசியல் மட்டத்தில் கசிந்தது தான் தாமதம் சிறி ரங்கா நாட்டை விட்டு ஐரோப்பியாவுக்கு பறந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இவர் தனது கைதை தடுப்பதற்காக பல வழிகளிலும் அரசியல் புள்ளிகளின் உதவியை நாடிவருகின்றார் எனக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் ஐரோப்பிய நாடுகளில் தனது இருப்பிடத்தை மாற்றி மாற்றி தங்கிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் கடமை புரியும் தொலைக்காடசியின் செய்திப் பிரிவானது இவரது கட்டுப்பாட்டுக்குள் உள்ள விடயம் எல்லோரும் அறிந்த உண்மையே. இவரின் மேற்பார்வையின் பின்னரே இச்செய்திகள் ஒலி, ஒளிபரப்பப்படுவதும் நாமறிந்ததே.
இவர் தினமும் ஒளிபரப்பாகும் செய்திகளை மேற்பார்வை செய்வதற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து இணைய வலையமைப்புக்கள் மூலம் குறித்த தொலைக்காடசியுடன் தினமும் பேசிவருவதாகவும் அறியமுடிகின்றது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW