மீன்பிடிக்கச் சென்றவரின் வலையில் சிக்கிய துப்பாக்கிகள்
திருகோணமலை - புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தென்னைமரவாடி பகுதியின் கலப்புக் கடலில் மீன் பீடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் வலையில் இரண்டு துப்பாக்கிகள் சிக்கி உள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த துப்பாக்கிகள் நேற்று வெள்ளிக்கிழமை (26) மாலை 4.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளன.
ரி - பிட்டர் ரக துப்பாக்கி மற்றும் ஜீ.ஆர் வர்க்க துப்பாக்கிகள் இரண்டே மீட்கப்பட்டுள்ளன.
வலையில் துப்பாக்கிகள் சிக்கியுள்ளதை அவதானித்த மீனவர் சம்பவம் குறித்து புல்மோட்டை பொலிஸாருக்கு தகவலை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவ்விடத்திற்கு விரைந்து சென்ற புல்மோட்டை பொலிஸார் அந்த ஆயுதங்களை மீட்டுள்ளனர். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW