மருமகன் மாமியை வல்லுறவுக்குட்படுத்த முயன்றபோது மருமகனை கத்தியால் வெட்டினார் மாமி.

திருகோணமலை-புல்மோட்டை சுனாமி வீட்டுத்திட்டப்பகுதியில் மாமியாரின் கத்தி வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் அவரது மருமகன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கத்தி; வெட்டுக்கு இலக்கானவர் அதே இடத்தைச்சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான எம்.சத்தியசீலன் (31) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்
சம்பவம் குறித்து தெரியவருவதாகவது, கத்தியால் வெட்டிய மாமியாரின் மகள் வெளிநாட்டில் பணி புரிந்து வருவதாகவும் இரு பிள்ளைகளின் தந்தையான காயத்திற்குள்ளான மருமகள் நேற்றிரவு மதுபோதையில் மாமியாரை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட போதே கோபம் கொண்ட மாமியார் கத்தியால் வெட்டியதாக ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
கத்தி வெட்டுக்கு இலக்கான மருமகன் புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கத்தியால் வெட்டியதாக சந்தேகிக்கப்படும் மாமியாரான புல்மோட்டை - வீரந்தீவு பகுதியைச் சேர்ந்த கனகசிங்கம் நாகம்மா (56) கைது செய்யப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW