“எங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி” – மகிந்த ராஜபக்ஷவின் புதிய கட்சியின் பெயர்..!! முள்ளிநியூஸ்

“எங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி” – மகிந்த ராஜபக்ஷவின் புதிய கட்சியின் பெயர்..!!


புதிய கட்சி அமைக்கப்படுவதனை தடுக்க முடியாத என கூட்டு எதிர்க்கட்சியின் பெயர் குறிப்பிட விரும்பாத சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் ஞாயிறு பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் திறமையான தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சி நடத்தும் சுதந்திரக் கட்சி கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகித்தால் தனிக் கட்சி அமைப்பதனை தடுக்க முடியாது.

எதிர்வரும் செப்டம்பரின் பின்னர் புதிய கட்சி அமைக்க நேரிடும்.கட்சியின் ஆதரவாளர்களினால் ஏற்கனவே “எங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியொன்றை உருவாக்கும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

எனினும் இறுதித் தருணம் வரையில் சுதந்திரக்கட்சியின் ஒற்றுமைப் பேணிப் பாதுகாக்க முயற்சிகள் எடுக்கப்படும்.

தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்குதல் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்வதாக எச்சரித்தல் உள்ளிட்ட பல்வேறு அழுத்தங்களுக்கு அடிபணியாது இருக்கின்றோம்.

எதிர்வரும் நாட்களில் இன்னும் சிலர் கட்சி தொகுதி அமைப்பாளர் பதவிகளிலிருந்து விலகிக்கொள்வர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிராமிய மட்ட அதிகாரம் யாரிடம் இருக்கின்றது என்பது எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது நன்றாக புரிந்து கொள்ள முடியும் என கூட்டு எதிர்க்கட்சியின் பெயர் குறிப்பிட விரும்பாத உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW