கடத்தப்பட்ட கோடீஸ்வர் சுலைமான் சடலமாக மீட்பு!
பம்பலபிட்டியில் கடத்தப்பட்டிருந்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் சுலைமானின் சடலம் மாவனெல்ல ஹெம்மாதகம ருகுலுகம பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த பகுதியில் நேற்று மீட்கப்பட்ட சடலத்தை, மொஹமட் சுலைமானின் உறவினர்கள் அடையாளம் காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவரது மரணப் பரிசோதனை இன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பில் அவரது தந்தை மற்றும் சகோதரரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 21-ம் திகதி இரவு அவர் கடத்தப்பட்டிருந்தார்.மங்கள நிகழ்வொன்றில் பங்கேற்று தமது வாகனத்தில் வீடு திரும்பிய வேளையில், சிலரால் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW