திருகோணமலையிலுள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்-Imran

இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கல்வியமைச்சின் விவாதத்தின்போது தெரிவித்த கருத்துகள் சுருக்கமாக
திருகோணமலையிலுள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் திருகோணமலையில் பல பாடசாலைகளில் பௌதீக ஆளணி குறைபாடுகள் நிலவுகின்றன இதற்கான காரணங்களில் பிரதானமானது இப்பாடசாலைகள் பல மாகாணசபையின் கட்டுப்பாட்டுக்குள்ளே இருப்பதாகும் மாகாண சபையிடம் போதியளவு நிதியில்லாமையினால் இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்யமுடியாதுள்ளது
எனவே திருகோணமலையில் பொருத்தமான பாடசாலைகள் சில தெரிவுசெய்யப்பட்டு அவை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்
இதன்மூலம் அங்கு நிலவும் குறைபாடுகளை ஓரளவு நிவர்த்தி செய்யலாம் இது அங்குள்ள மாணவர்களின் கல்வி,விளையாட்டு உட்பட பலவித திறமைகளை விருத்திசெய்ய உதவும் செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW