பாகிஸ்தான் நீதிமன்றத்தில் தற்கொலை தாக்குதல்: 11 பேர் பலி முள்ளிநியூஸ்

பாகிஸ்தான் நீதிமன்றத்தில் தற்கொலை தாக்குதல்: 11 பேர் பலி


பாகிஸ்தானின் வட பகுதியில் இருக்கும் நீதிமன்றம் ஒன்றில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.
மார்தான் மாவட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் டஜன்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பெஷாவரில் நடத்தப்பட்ட இன்னொரு சம்பவத்தில், கிறிஸ்தவ சுற்றுப்புறப் பகுதி ஆயுததாரிகளால் தாக்குதலுக்கு உள்ளானதாக ராணுவம் தெரிவிக்கிறது.

இந்த தாக்குதல் மிக விரைவாக முடியடிக்கப்பட்டது என்றும், நான்கு ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர் என்றும் ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் தாலிபன் இயக்கத்தின் பிரிவான ஜமாத்-உல்-அஹ்ரார் தெரிவித்திருக்கிறது.

BBC

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW