திருகோணமலை-தென்னமரவாடி களப்பு பகுதியில் துப்பாக்கி மீட்பு முள்ளிநியூஸ்

திருகோணமலை-தென்னமரவாடி களப்பு பகுதியில் துப்பாக்கி மீட்பு


திருகோணமலை-தென்னமரவாடி கலப்புப்பகுதியில் நான்காவது தடவையாக நேற்றிரவு (01) ரீ 56 துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
தென்னமரவாடி கலப்பு பகுதியில் துப்பாக்கியொன்று தென்படுவதாக பொலிஸ் அவசர அழைப்பிற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கியை மீட்டுள்ளனர்.
துப்பாக்கி தொடர்பான அறிக்கையினை நீதிமன்றிற்கு சமர்பிக்கவுள்ளதாகவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW