திருகோணமலையில் பஸ் விபத்து! 18 பேர் மருத்துவமனையில்! முள்ளிநியூஸ்

திருகோணமலையில் பஸ் விபத்து! 18 பேர் மருத்துவமனையில்!


திருகோணமலை தொடக்கம் பருத்தித்துறை வரை பயணித்த தனியார் பஸ் ஒன்று ஹொரவப்பத்தான பகுதியில் நேற்று இரவு விபத்துக்கு உள்ளாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணித்த தனியார் பஸ் ஒன்றில் 18 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஹொரவப்பத்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

இந்த பஸ் ஹொரவப்பத்தான எனுமிடத்திலுள்ள 35 ஆவது மைல்கல் அருகே கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது எனவும் ,6 பெண்கள் மற்றும் 12 ஆண்கள் இதன்போது காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் ஹொரவப்பத்தான மற்றும் அனுராதபுர வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விபத்து இடம்பெற்றுவதற்கான காரணம் சாரதியினால் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் போனதே ஆகும்.

இந்த விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை ஹொரவப்பத்தான பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW