காலியில் விபத்து – 38 பேர் வைத்தியசாலையில்

காலி மாபலகமே வீதியில் பேரூந்து; ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதியதில் 38 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
காலியிலிருந்து போகஹகொடவுக்கு பயணித்த பேரூந்தும் மாபலக பகுதியிலிருந்து காலிக்கு பயணித்த பேரூந்தும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்தில் காயமடைந்த 38 பயணிகளும் காலி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW