மலேரியாவை முற்றாக ஒழித்த நாடாக இலங்கை
இலங்கையை மலேரியா நோயில் இருந்து விடுபட்ட நாடாக, உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தியுள்ளது.
இதன்படி, இதற்கான சான்றிதழ் இன்று வழங்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
20ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் மலேரியாவின் பாதிப்பு அதிகம் இருந்த நாடுகளில் ஒன்றாக இலங்கை விளங்கியது. தற்போது, அந்த நோயை முற்றாக இல்லாதொழித்த நாடுகளின் வரிசையில் இலங்கை இடம்பெற்றுள்ளமை முக்கியமான சாதனை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW