Alert : சவூதிக்கு தொழிலுக்குச் சென்று, அங்கு வேறு தொழிலில் ஈடுபடுவோர் இலங்கை வரும் போது 4 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்..!! வேலை வாய்ப்பு பணியகம் அறிவிப்பு முள்ளிநியூஸ்

Alert : சவூதிக்கு தொழிலுக்குச் சென்று, அங்கு வேறு தொழிலில் ஈடுபடுவோர் இலங்கை வரும் போது 4 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்..!! வேலை வாய்ப்பு பணியகம் அறிவிப்பு


சவூதி அரேபியாவிற்கு தொழிலுக்கு செல்லும் நபர்கள் அங்கு வேறு தொழிலில் ஈடுபடுவதற்காக சட்டவிரோதமாக தப்பிச்சென்றால், மீண்டும் அவர்கள் இலங்கைக்கு வரும் போது 4 இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டி ஏற்படும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அது, சவூதி அரேபியாவில் இம்மாதம் தொடக்கம் அமுல்ப்படுத்தப்படவுள்ள புதிய தொழிற் சட்டத்திற்கு அமைவாகவாகும்.

சவூதி உள்துறை அமைச்சினால் அறிவிக்கப்பட்ட குறித்த சட்டம் அந்நாட்டில் தொழில் புரியும் அனைத்து வௌிநாட்டு தொழிலாளர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் , வௌிநாட்டு தொழிலாளர்கள் தொழில் செய்யும் இடத்தில் இருந்து தப்பிச் சென்றால் , அது தொடர்பில் அதன் உரிமையாளர் முறைபாட்டொன்றை மேற்கொண்டிருந்தால் , குறித்த நபர் மீண்டும் இலங்கைக்கு வருவதற்காக சவூதி ரியால் 10 ஆயிரத்தினை அபராத தொகையாக செலுத்த வேண்டும்.

அது , இலங்கை பெறுமதி படி மூன்று இலட்சத்து 87 ஆயிரம் ரூபாய் ஆகும்.

இதன் காரணமாக , தொழில் புரியும் இடங்களில் இருந்து வேறு இடங்களுக்கு தப்பிச்செல்ல வேண்டாம் என்றும் , வீசா காலம் நிறைவடைந்த நிலையில் அந்நாட்டில் தங்கியிருக்க வேண்டாம் என்றும் மற்றும் சுற்றுலா வீசாவில் சென்று அங்கு தொழிலில் ஈடுபட வேண்டாம் என்றும் இலங்கை வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW