காணாமல் போன சிறுவனும் சிறுமியும் ரயிலில் இருந்து மீட்பு முள்ளிநியூஸ்

காணாமல் போன சிறுவனும் சிறுமியும் ரயிலில் இருந்து மீட்பு


உப்புவெளி பகுதியில் காணாமல் போனதாக கூறப்பட்ட இரு சிறுவர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மட்டக்களப்பு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த வேளை வாழைச்சேனை பொலிஸாரால் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை - உப்புவௌி பகுதியின் மிஹிதுபுர பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதான சிறுமி மற்றும் 11 வயதான சிறுவனும், மேலதிக வகுப்புக்குச் செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளனர்.

பின்னர் இவர்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த இருவரும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW