ரயில் தடம்புரள்வு - திருகோணமலைக்கான போக்குவரத்து பாதிப்பு
நிலக்கரி ஏற்றிச் சென்ற ரயில் ஒன்று திருகோணமலையில் தடம்புரண்டுள்ளது.இன்று காலை 08.30 அளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் திருகோணமலையில் இருந்து மஹவ நோக்கி பயணித்த ரயில் எஞ்சினே தடம்புரண்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.
இதனால் திருகோணமலை நோக்கிய ரயில் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை நிலைமையை வழமைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேலும் இதனால் காலை 11.20க்கு திருகோணமலையில் இருந்து கல்ஓயா நோக்கி பயணிக்கவிருந்த ரயில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாலை 03.00 மணிக்கு கல்ஓயாவில் இருந்து திருகோணமலை நோக்கி செல்லவிருந்த ரயிலும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW