கோவையில் முஸ்லிம்களை மையமாக வைத்து இந்துமுன்னணி தொடர் வன்முறை

இந்தியா கோவையில் இந்து முன்னனியின் செய்தி தொடர்பாளர் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார் . கொலையாளிகள் யார் என்று தெரியாத நிலையில் இந்து முன்னணி, பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகள் இணைந்து கோவையில் கடைகளை அடித்து நொறுக்கியும், வாகனங்களுக்கு தீ வைத்தும் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர. இதனால் கோவை முழுவதும் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
நிலையில் இந்து முன்னணி, பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகள் இணைந்து கோவையில் கடைகளை அடித்து நொறுக்கியும், வாகனங்களுக்கு தீ வைத்தும் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதனால் கோவை முழுவதும் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
முதலில் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். பின்னர் டவுன்ஹால் அருகே உள்ள கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல் நடத்தினர்
பல இடங்களில் போலீசார் முன்னிலையிலேயே கடைகளை அடித்து நொறுக்குவது உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேற்யுள்ளன. இந்நிலையில் துடியலூர் பகுதியில் நுழைந்த ஒரு கும்பல் அப்பகுதியில் இருந்து ஏராளமான கடைகளை அடித்து நொறுக்கி சூரையாடினர். பின்னர் அங்கிருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். அப்பகுதியில் நின்று கொண்டிருந்த போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இதையடுத்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.
காலை முதல் மாலை 5 மணி வரை வன்முறை நீடித்து வருகிறது. துடியலூர் பகுதியில் போலீஸ் முன்னிலையிலேயே பல கடைகளுக்கும் தீ வைத்தனர். போலீஸ் ஜீப் ஒன்றையும் தீ வைத்து கொழுத்தினர். இதை தொடர்ந்து தீயனைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தனர். அப்போதும் சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்தவர்கள் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் நின்றிருந்தவர்களை விரட்டியடித்தனர். தொடர்ந்து துடியலூர் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.
இந்து முன்னணியினரின் வன்முறையை படம் பிடித்து கொண்டிருந்த பத்திரிக்கையாளர்களையும் தாக்கினர். சிலரின் வீடியோ கேமராக்களை பிடிங்கி உடைத்து நொறுக்கினர்.
ஏற்கனவே உக்கடம், கோட்டை மேடு பகுதிகிளில் இஸ்லாமியர்கள் வசிக்கும் தெருக்களில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டதால் பின்வாங்கினர்.