எனது நிதியில் அதிகமானவற்றை கல்விக்காக ஒதுக்கியுள்ளேன் – அப்துல்லா மக்ரூப் முள்ளிநியூஸ்

எனது நிதியில் அதிகமானவற்றை கல்விக்காக ஒதுக்கியுள்ளேன் – அப்துல்லா மக்ரூப்


தனக்கு வழங்கப்பட்ட நிதியில் இருந்து அதிகமானவற்றை கல்விக்காகவே ஒதுக்கியுள்ளேன் என்று இன்று(04) கிண்ணியா மத்திய கல்லுாரியில் இடம் பெற்ற பாடசாலை அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

பழைய மாணவர் சங்க தலைவனாக இரண்டு வருடங்கள் இருந்திருக்கிறேன் இதே பாடசாலையில் தற்போது உட்கட்டமைப்பு வசதிகள் குறைகள் காணப்படுகின்றது. இதனை செப்டம்பர் மாதத்தில் தொடங்கி ஒக்டோபர் மாதத்தில் பிரதம மந்திரி ஊடாக இத்திட்டத்தை முடிப்பதற்கு நடவடிக்கை மேற் கொள்வேன் எனவும் தற்போது தேசிய மட்ட பாடசாலைகளில் நிலவும் வளப்பற்றாக் குறையை தீர்க்க பிரதமர் ஜனாதிபதியிடத்தில் பல மில்லியன் ரூபாய் தேவையாக உள்ளதாகவும் இதனை ரிசாட் பதியுதீனூடாக பெறுவதற்கு நடவடிக்கை மேற் கொள்வதாகவும் மேலும் கருத்து தெரிவித்தார். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW