'கபாலி' படத்திற்கு வழங்கப்பட்ட வரிச்சலுகைக்கு எதிராக வழக்கு முள்ளிநியூஸ்

'கபாலி' படத்திற்கு வழங்கப்பட்ட வரிச்சலுகைக்கு எதிராக வழக்கு


கபாலி படத்திற்கு வழங்கப்பட்ட கேளிக்கை வரிச்சலுகையை ரத்து செய்திட வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் இது குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதிக பொருட்செலவில் பல கோடி செலவில் எடுக்கப்பட்ட கபாலி படத்திற்கு கேளிக்கை வரிச்சலுகை அளித்திருப்பது சட்டத்திற்கு முரணானது என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கபாலி படம் தமிழ் கலாச்சாரம் சார்ந்தாக இல்லை எனவும், வன்முறை காட்சிகள் அதிகமுள்ள இதுபோன்ற படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க கூடாது எனவும், மணி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

கபாலி படத்திற்கு கேளிக்கை வரிச்சலுகை அளிக்க தமிழக அரசின் வணிக வரித்துறைச் செயலர் பரிந்துரைத்திருப்பது சட்டவிரோதமானது என்பதால், கபாலி படத்திற்கு வழங்கப்பட்ட கேளிக்கை வரிச்சலுகையை ரத்து செய்ய வணிக வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW