இளைஞர் மீது தாக்குதல் - ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாற்றம் முள்ளிநியூஸ்

இளைஞர் மீது தாக்குதல் - ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாற்றம்


ஹட்டன் நகரிலுள்ள சிகை அலங்கார நிலையத்தில் வைத்து இளைஞர் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஹட்டன் பிரதான பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு இவரை மாற்றியுள்ளதாக ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த சிகை அலங்கார நிலையத்தின் உழியர் ஒருவர் நேற்று தாக்கப்பட்டதாக கூறி அப் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட இளைஞன் தொடர்ந்தும் டிக்கோயா கிழங்கன் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW