பொலிஸ்மா அதிபரின் பெயரில் போலியான பேஸ்புக் கணக்கு வைத்திருந்தவர் கைது. முள்ளிநியூஸ்

பொலிஸ்மா அதிபரின் பெயரில் போலியான பேஸ்புக் கணக்கு வைத்திருந்தவர் கைது.


பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர அவர்களின் முகப்புத்தக பக்கத்தை போன்று போலியான முகப்புத்த பக்கமொன்றை உருவாக்கி போலி பொலிஸ்மா அதிபராக இணையத்தில் வலம் வந்த ராஜித மதுஷான் வீரசேகர எதிர் வரும் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவு பிறப்பித்தார்.

கைதானவர் நியுசிலாந்து நாட்டிலிருந்து இவ்வாரு போலி முகப்புத்தக பக்கத்தை உருவாக்கி பெண்களை ஏமாற்றியுள்ளதுடன், வெவேறு குற்றச்செயல்களிலும் ஈடுபட்டுள்ளார். இவர் நாடு திரும்பும் போது இரகசிய பொலிஸாரினாள் கைது செய்யப்பட்டார்.

H B றிஸ்வானுஸ் ஸமான் 07/09/2016 கொழும்பு செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW