இது நாள்வரை நான், இனவாதியாக செயற்படவில்லை - சீ.வி.விக்கினேஸ்வரன் முள்ளிநியூஸ்

இது நாள்வரை நான், இனவாதியாக செயற்படவில்லை - சீ.வி.விக்கினேஸ்வரன்


தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனவாதியாகவோ, சிங்கள எதிர்ப்பாளனாகவோ செயற்பட்டது இல்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தனது பிள்ளைகள் இருவரும் திருமணம் முடித்திருப்பது சிங்கள இனத்தை சேர்ந்தவர்களையே என்றும் அவர் மேலும், தெரிவித்திருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் வாழும் தமிழர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் பற்றி கருத்துரைத்தால் இனவாதியாக சித்தரிக்கப்படுவதாகவும், எனினும் இது நாள் வரை தான் இனவாதியாக செயற்பட்டது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

'எழுக தமிழ்' நிகழ்வானது மிகவும் அமைதியான பேரணியாகும்.

குறித்த பேரணியின் ஆரம்பத்தின் போது 'சிங்களத்திற்கோ, பௌத்தத்திற்கோ, அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தோ பேரணி முன்னெடுக்கப்படவில்லை என்றும் தான் குறிப்பிட்டிருந்ததாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனவே நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு ஒரே தீர்வு பெடரல் முறை என்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW