இலங்கை விடயத்தில் தவறிழைத்து விட்டோம்

இலங்கையில் பல தசாப்தங்களாக காணப்படுகின்ற பிரச்சினைகனை தீர்ப்பதற்கு தற்போதைய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை தான்மதிப்பதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
தனது மூன்று நாள் இலங்கைப் பயணத்தின் முடிவில், நேறடறு (02) வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் பேசிய பான் கீ மூன் இக் கருத்தைத் தெரிவித்தார்.
இலங்கையின் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்க முன்னேற்றத்திற்கான செயற்பாடுகளுக்கு ஐநா எப்பொழுதும் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை நேற்று காலை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய பான் கீ மூன், இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடு போதுமானதாக இருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கையிடம் இருந்து பல பாடங்களை கற்றுக்கொண்டதாக கூறியுள்ளார்.
ருவாண்டா, இலங்கை, பொஸ்னியா நாடுகளில் நடந்த யுத்தத்தின் போது, ஐக்கிய நாடுகள் அமைப்பின் தவறுதலால் பல மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் இப்படி தவறுகள் இடம்பெறாமல், மனித உயிர்களை காக்க அர்ப்பணிப்புடன் செயற்பட போவதாகவும் பான் கீ மூன் மேலும் தெரிவித்துள்ளார். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW