குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கும் வேலைத்திட்டம் முள்ளிநியூஸ்

குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கும் வேலைத்திட்டம்

        
விவசாய நடவடிக்கைகளுக்காக குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை வழங்கும் வேலைத் திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.

இதன்படி விவசாயத்திற்கு நீர் இறைக்கும் நடவடிக்கைகளுக்காக இரவு 10.00 மணியில் இருந்து காலை 06.00 மணி வரை குறைந்த கட்டணத்தில் மின் விநியோகத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இதன் முதற்கட்டம் யாழ் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் ரஞ்சித் சியம்பலாபிடிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW