ஓய்வு பெற்ற அதிபர் எம்.ஏ.சமதின் நூல் வெளியீட்டு விழா

ஓய்வு பெற்ற அதிபர் எம்.ஏ.சமது எழுதிய நெய்தல் நகர் ஹிழுறு ஜும்ஆ மஸ்ஜித் வரலாறு நூல் வெளியீட்டு விழா மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரி மண்டபத்தில் இன்று ஞயிற்றுக் கிழமை( 18) இடம்பெற்றது.
கிழக்கு மாகாண பேரவைச் செயலாளர் எம்.சி.எம்.சரீப் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் நூல் முதல் பிரதியை நூலாசிரியரிடமிருந்து ஓய்வு பெற்ற உதவி அரசாங்க அதிபர் யூ.இஸட்.ஆப்தீன் பெற்றுக் கெண்டார்; இவ்வெளியீட்டு விழாவில் இலக்கியவாதிகள், இலக்கிய ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

