பொலிஸ் நிலையத்தில் வைத்து தூக்கில் தொங்கிய சந்தேகநபர் பலி

புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் தூக்கில் தொங்கிய சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புஸ்ஸல்லாவ - ரொத்சைல்ட் தோட்டத்தை சேர்ந்த நடராஜா ரவிசந்திரன் என்ற 28 வயது இளைஞன் பொலிஸ் நிலையத்தில் வைத்து தூக்கில் தொங்கிய நிலையில், மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
எனினும் செல்லும் வழியில் அவர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்தநபர் குற்றச்செயல் ஒன்றின் காரணமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் இவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதன்படி நேற்று இரவு 07.30 அளவில் புஸ்ஸல்லாவ - பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, நீதிமன்றில் ஆஜர்படுத்தும் வரை புஸ்ஸல்லாவ பொலிஸ் பாதுகாப்பில் வைத்திருந்தனர்.
இந்தநிலையில், சந்தேகநபர் தனது ரீசேட்டை பயன்படுத்தி தூக்கில் தொங்கியுள்ளதாக புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும் உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போதும் இடையில் அவர் இறந்துவிட்டதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW