ஹஜ்ஜுக்கு அனுப்புவதாக கூறி, ஏமாற்றிய முகவர்கள் பற்றி முறையிடுங்கள்...!

இலங்கைக்கு கிடைக்கும் மேலதிக ஹஜ் கோட்டாவின் மூலம் ஹஜ் ஏற்பாடுகளைச் செய்வதாக உறுதியளித்து மக்களிடமிருந்து முற்பணம் பெற்றுக்கொண்டுள்ள ஹஜ் முகவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தமது முறைப்பாடுகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்க வேண்டுமெனவும் அரச ஹஜ் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அரச ஹஜ் குழுவின் உறுப்பினர் மெளலவி எம்.எஸ்.எம்.தாஸிம் இவ்வேண்டுகோளை முன்வைத்துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இவ்வருடத்துக்கான ஹஜ் கடமை தொடர்பில் கருத்து வெளியிடுகையில், இலங்கையிலிருந்து இவ்வருடம் ஹஜ் பயணம் மேற்கொண்ட யாத்திரிகர்கள் அனைவரும் நலமாக இருக்கின்றனர்.
அவர்கள் தங்கியிருக்கும் இடங்களுக்கு தற்போது ஹஜ் கடமையில் ஈடுபட்டிருக்கும் அமைச்சர்களான எம்.எச்.ஏ.ஹலீம், ஏ.எச்.எம்.பெளஸி ஆகியோர் நேரடி விஜயங்களை மேற்கொண்டு முகவர்களால் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சேவைகள் பற்றி ஆராய்ந்தனர்.
அமைச்சர்களுடன் அமைச்சரின் பிரத்தியேக செயலாளரும், ஹஜ் குழு உறுப்பினருமான எம்.எச்.எம்.பாஹிம், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ஸமீல், ஹஜ் குழுத்தலைவர் கலாநிதி எம்.ரி.சியாத் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்றார்.
ஹஜ் கடமையில் ஈடுபட்டிருக்கும் அமைச்சர்கள் ஹலீம், பெளஸி ஆகியோரும், பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் மற்றும் அரச ஹஜ் குழுத்தலைவர் உட்பட உறுப்பினர்களும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ஸமீல் ஆகியோரும் எதிர்வரும் 17 ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளனர்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW