"ஐக்கிய தேசியக் கட்சியின் வாலைப் பிடித்துக்கொண்டு, அரசியலில் ஈடுபடப்போவதில்லை" முள்ளிநியூஸ்

"ஐக்கிய தேசியக் கட்சியின் வாலைப் பிடித்துக்கொண்டு, அரசியலில் ஈடுபடப்போவதில்லை"


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வாலைப் பிடித்துக்கொண்டு தாம் ஒருபோதும் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என தெரிவித்த பைசர் முஸ்தபா, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் ஒன்றிணைந்த அரசாங்கம் 5 வருடங்களுக்கு செயற்படும் எனவும் குறிப்பிட்டார்.

அமைச்சர் பைசர் முஸ்தபா இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இக்கருத்துக்களைத் தெரிவித்தார். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW