வீதியின் பெயர் திசை காட்டியை விளம்பரம் போஸ்டர் ஒட்டி மறைப்தால் மூதூர் ஆலிம்சேனை பிரதேச மக்கள் விசனம் முள்ளிநியூஸ்

வீதியின் பெயர் திசை காட்டியை விளம்பரம் போஸ்டர் ஒட்டி மறைப்தால் மூதூர் ஆலிம்சேனை பிரதேச மக்கள் விசனம்


திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதான வீதியில் இ௫ந்து ஆலிம்சேனை செல்வதற்கு போடப்பட்ட வீதி பெயர் திசை காட்டி இப்படி விளம்பரம் போஸ்டர் ஒட்டி மறைப்தால் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

 இதனால் இவ் வீதியால் செல்ல வேண்டியோர் தவறி வேறு வழியாக சென்று மீள வந்து தடுமாறி செல்வதாக தெரிவித்தனர். இது கண்டனத்துக்குரிய செயலாகும் எனவும் உடனடியாக விளம்பர போஸ்டர் அகற்றப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர். 

எனவே இவ் வீதியின் பெயர் மக்கள் பார்வைக்கு தெளிவாக எழுதப்பட்டு மீண்டும் விளம்பரங்களை காட்சிப் படுத்துவோருக்கு எதிராக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அனுப்புனர்:- லிஹார் முகமட்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW