கசப்­பானதை மறந்துவிட்டு, எம்முடன் இணையுங்கள் - முஸ்லிம்களுக்கு மஹிந்த அணி அழைப்பு முள்ளிநியூஸ்

கசப்­பானதை மறந்துவிட்டு, எம்முடன் இணையுங்கள் - முஸ்லிம்களுக்கு மஹிந்த அணி அழைப்பு


முஸ்­லிம்கள் கடந்த கால கசப்­பான சம்­ப­வங்­களை மறந்து எம்­முடன் ஒன்று சேருங்கள். நாம் அமைக்­க­வுள்ள ஆட்­சியில் முஸ்­லிம்­க­ளுக்குப் பாது­காப்பும் ஏனைய சமூ­கங்­களைப் போல் சகல உரி­மை­களும் வழங்­கப்­படும் என மஹிந்த தரப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

நேற்றுக் -23- காலை பத்­த­ர­முல்லை, நெலும்­பொக்­குன மாவத்­தை­யி­லுள்ள இணைந்த எதிர்க்­கட்­சி­யி­னரின் அலு­வ­ல­கத்தில் மஹிந்த அணி ஆத­ரவு முஸ்லிம் பிர­மு­கர்கள் கலந்­து­கொண்ட கூட்­ட­மொன்று நடை­பெற்­றது. நிகழ்­வுக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமை வகித்தார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவை ஆத­ரிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் முஸ்லிம் ஆத­ர­வா­ளர்­க­ளுக்­கான முஸ்லிம் பிரி­வொன்­றினை ஆரம்­பிப்­பது பற்றி கூட்­டத்தில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. அப்­பி­ரி­வுக்கு முஸ்லிம் முற்­போக்கு முன்­னணி எனப் பெய­ரி­டு­வ­தெ­னவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இக்­கூட்­டத்­திற்கு தலைமை வகித்து உரை­யாற்­று­கை­யி­லேயே பசில் ராஜபக்ஷ மேற்­கண்­ட­வாறு கூறினார். அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்;

நாம் அமைக்கும் கட்­சியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான எந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கும் இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது கடந்த காலங்­களில் எமது ஆட்­சியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான சில சம்­ப­வங்கள் இடம்­பெற்­றன. இதை நாம் ஏற்­றுக்­கொள்­கிறோம். அவற்றை முஸ்­லிம்கள் மறந்­து­விட வேண்டும் என்றார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW