கோர விபத்து - ஒருவர் உயிரிழப்பு-நுவரெலியா பிரதான வீதியில்-(photo)

10.09.2016 அன்று சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக லிந்துலை போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
எனினும் இதில் பயணித்த, உயிரிழந்தவரின் மனைவியும், பிள்ளையும் தெய்வாதீனமாக உயிர் தப்பியதோடு, சிறு காயங்களுடன் லிந்துலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர் முச்சக்கரவண்டியின் சாரதியான ஹட்டன் பகுதியை சேர்ந்த என்.பிரஸ்டன் 29 வயது மதிக்கதக்கவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.