UN மனித உரிமைகள் ஆணைக்குழுவில் யாழ் முஸ்லிம்கள் மகஜர்கள் முள்ளிநியூஸ்

UN மனித உரிமைகள் ஆணைக்குழுவில் யாழ் முஸ்லிம்கள் மகஜர்கள்


சர்வதேசப் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் குறித்த மகஜர்கள் கையளிக்கப்பட்டது ,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 33 ஆவது கூட்டத்தொடர் தற்போது ஜெனீவா நகரில் நடைபெற்றுது.

இதன் ஒரு அமர்வாக 27 செவ்வாய்கிழமை அன்று யாழ்ப்பாண முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு. அவர்களின் தற்போதைய வாழ்வாதார நெருக்கடிகள் பெண்கள் சிறுவர் உரிமைகள் தொடர்பில் ஆராயும் சிறப்பு அமர்வு நடைபெற்றது.

சர்வதேசப் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் நோர்வேயில் இருந்து வருகை தந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரர் அனீஸ் ரவூப் யாழ்ப்பாண முஸ்லிம்கள் குறித்து உரையாற்றினார். இவர்களுடன் லண்டன், பிரான்ஸ் தேசங்களில் இருந்து வருகைதந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 2 மாணவிகளும் ஆங்கிலம் மற்றும் பிரான்ஸ் மொழிகளில் உரையாற்றினார்கள்.

திட்டமிட்டபடி இந்த அமர்வு குறித்த நேரத்திற்கு ஆரம்பிக்கப்படாமையாலும், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட அறை மாற்றபட்டதாலும், அமர்வு ஒரு மணி நேரமாக மட்டுப்படுத்தப்பட்டதாலும் இந்த அமர்வுக்கு வருகை தருவதாக வாக்குறுதி வழங்கியிருந்த கட்டார், சவூதி மற்றும் அபுதாபி உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்கள் பங்கேற்பதிலும் சிக்கல் நிலை தோன்றியது.

இருந்தபோதும் சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் அமைப்பினரால் உரிய பல தரப்பினருக்கு மகஜர்கள் கையளிக்கப்பட்டது. அந்த மகஜரில் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டுமென பிரதானமாக வலியுறுத்தப்பட்டிருந்தது.

u-jpg2-jpg3

u-jpg2-jpg3-jpg4

u
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW