கிண்ணியா உப்பாறு பகுதியில் விபத்து – ஒருவர் பலி (வீடியோ)

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான விதியின் உப்பாறு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை 5.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மூதூர் லங்காபட்டுன பகுதியிலிருந்து மீன்களை ஏற்றி சென்ற வாகனமும், ஈச்சந்தீவிலிருந்து மூதூரை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 29 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சடலம் தற்போது கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.