திருகோணமலை ஜமாலியாவில்:- 11 வயது சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 2 சிறுவர்கள் கைது முள்ளிநியூஸ்

திருகோணமலை ஜமாலியாவில்:- 11 வயது சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 2 சிறுவர்கள் கைது


திருகோணமலை ஜமாலியா பகுதியில் 11 வயது சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரண்டு சிறுவர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களான இரண்டு சிறுவர்களும் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சிறுவர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

ஜமாலியா கடற்கரையில் நின்று கொண்டிருந்த சிறுவனை குழுவாக சேர்ந்து சிலர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

திருகோணமலை தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW