மகாவலி ஆற்றை பயன்படுத்துவோர் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் அனைத்து வான்கதவுகளும் இன்று திறந்துவிடப்படவுள்ளதாக இலங்கை மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதனால் பொல்கொல்ல நீர்த்தேக்கத்திற்கு அண்மையில் வசிக்கும் மக்கள் மகாவலி ஆற்றை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அதிகார சபையின் பொறியியலாளர் வீ,ஏ.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம் இன்று (09) இரவு 10 மணிமுதல் நாளை (10) காலை 6 மணிவரை மகாவலி ஆற்றினை பயன்படுத்துவோர் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அதிகார சபை கோரிக்கை விடுத்துள்ளது.