மட்டக்குளிய - இல - 155 பஸ் ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு முள்ளிநியூஸ்

மட்டக்குளிய - இல - 155 பஸ் ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு


மட்டக்குளிய - சொய்சாபுரப் பகுதிகளுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் பஸ் (155) ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை முதல் அவர்கள் இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சர்ச்சைக்குரிய முறையில் பஸ் ஊழியர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக குற்றம்சுமத்தியே அவர்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

எதுஎவ்வாறு இருப்பினும், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் விடுதலை செய்யப்படும் வரை, தொடர்ந்தும் பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக, சொய்சாபுர - மட்டக்குளிய பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கமல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரான பஸ் ஊழியர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW