ஹெலிகப்டர் விபத்தில் 19 பேர் உயிரிழப்பு
சைபீரியா நாட்டில் இயந்திர கோளாறினால் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கிய விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.
சைபீரியாவில் உள்ள கிரஸ்னோயார்ஸ்க் மாகாணத்தில் இருந்து யமாலோ-நெனெட்ஸ்கி மாகாணத்தில் உள்ள உரேங்கோய் நகரை நோக்கி 22 பேருடன் சென்றுகொண்டிருந்த Mi-8 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்றிரவு நோவி உரேங்கோய் பகுதியில் எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டரில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக நிலைதடுமாறி தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது.
இந்த விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காயமடைந்த மூன்றுபேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் நோவி உரேங்கோய் பகுதியில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.