காஷ்மீரில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 22 பேர் பலி முள்ளிநியூஸ்

காஷ்மீரில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 22 பேர் பலி



இந்தியாவின் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் வடக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள பள்ளதாக்கில் பஸ் ஒன்று வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீர் பிரதேசத்திலிருந்து 60 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ரியாசி மாகாணத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

மேலும் பஸ் வீதியை விட்டு விலகி பள்ளதாக்கில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்தியாவில் காணப்படும் உட்கட்டமைப்பு மற்றும் முறையற்ற நகர திட்டமிடல் காரணமாகவே விபத்துக்கள் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW