மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் மோதல்

கற்பிட்டி – குறிஞ்சாங்குளம் பகுதியில் நேற்று (20) ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் மோதலாக வலுப் பெற்றுள்ளது.
சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்களினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கபட்ட இடத்திற்கு சிலர் வருகை தந்ததையடுத்து இந்த மோதல் சம்பவம் ஆரம்பித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.