யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்று (21) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளொன்று மதில் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
யாழ். கந்தரோடை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும், கிளிநொச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவருமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவின் மூன்றாம் வருட மாணவர்கள் இருவரே உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்து தொடர்பில் யாழ்.தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.