விமானப்படை தளத்தை வீடியோ எடுத்த 2 பேர் கைது முள்ளிநியூஸ்

விமானப்படை தளத்தை வீடியோ எடுத்த 2 பேர் கைது



மராட்டிய மாநிலம் புனேயில் விமானப்படை தளம் உள்ளது. இங்குள்ள ராணுவ வீரர்களுக்கு அப்பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் இருந்து உணவுப்பொருள் நேற்று முன்தினம் வேனில் கொண்டு வரப்பட்டது. அதில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பேக்கரி தொழிலாளர்கள் ஜுபேர் ஆலம் அப்துல் ராவுப் அன்சாரி (வயது 25), சலாவுதீன் அன்சாரி (41) ஆகியோர் இருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில் facebook மூலம் தெரிந்துகொள்ள இங்கே Like Page யை க்ளிக் செய்யவும்
விமானப்படை தளத்துக்கு சென்ற போதும், திரும்பி வந்த போதும் தன்னுடைய ​கையடக்கதொலைபேசியில் வாகனத்தில் இருந்தவாறு ஜுபேர் வீடியோ படம் எடுத்தார். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற விமானப்படை வீரர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே வேனை நிறுத்தி அவர்களிடம் விசாரித்தனர். திடீரென இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் விமானப்படை வீரர்கள் அவர்களை துரத்தி பிடித்து விசாரித்தனர். அவர்கள் கூறிய பதிலில் திருப்தி ஏற்படாததால் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

விமானப்படை தளத்தை வீடியோ படம் பிடித்தது, விசாரணையின் போது அவர்கள் ஓட்டம் பிடித்தது விமானப்படை அதிகாரிகளிடையே மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே அவர்கள் பற்றிய முழு விவரம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW