அரசின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு அரசியல்வாதிகளின் பெயர் வேண்டாம் முள்ளிநியூஸ்

அரசின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு அரசியல்வாதிகளின் பெயர் வேண்டாம்


அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு அரசியல்வாதிகளின் பெயர்களை பயன்படுத்தக்கூடாது என்ற யோசனை ஒன்றை பாராளுமன்றத்தில் முன்மொழிய நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர கூறினார்.

செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில் facebook மூலம் தெரிந்துகொள்ள இங்கே Like Page யை க்ளிக் செய்யவும்


எந்தவொரு அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் அரசியல்வாதிகளின் பணத்தினால் முன்னெடுக்கப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், அது மக்கள் செலுத்துகின்ற வரிப்பணமே என்று கூறியுள்ளார்.

சில திட்டங்களுக்கு வௌிநாட்டு உதவிகள் அல்லது கடன்கள் கிடைப்பதாக கூறினார்.

இவ்வாறான நிலமையில் அந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு அரசியல்வாதிகளின் பெயர்களை பயன்படுத்துவது சிறந்த செயற்பாடு அல்ல என்று அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகின்றார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW