வவுனியா – அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயம் முள்ளிநியூஸ்

வவுனியா – அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயம்


வவுனியா – அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

வவுனியா அநுராதபுரம் பிரதான வீதியில் சாலிய புர பகுதியில் இந்த விபத்து நேற்று (13) மாலை
இடம்பெற்றது.

மதவாச்சியிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த வேன் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வவுனியாவிலிருந்து ஹம்பாந்தோட்டை நோக்கி பயணித்த பஸ் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

சம்பவத்தில் வேனில் பயணித்த 6 பேரும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW