தெல்தெனிய, ஒருதொட பகுதியில் கஞ்சா வைத்திருந்த பாடசாலை மாணவர்கள் கைது முள்ளிநியூஸ்

தெல்தெனிய, ஒருதொட பகுதியில் கஞ்சா வைத்திருந்த பாடசாலை மாணவர்கள் கைது


கண்டி – தெல்தெனிய – ஒருதொட பகுதியில், ஒரு தொகை கஞ்சா வைத்திருந்த, பாடசாலை மாணவர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி நகரில் உள்ள 3 பாடசாலைககளை சேர்ந்த 10 மற்றும் 11 வயதுக்குட்பட்ட மாணவர்களிடமிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை முடிந்ததும் பாடசாலை சீருடையுடன் ஊருதொட்டை பகுதியில் சந்தேகத்திடமான முறையில் நடமாவடுவதாக வழங்கப்பட்ட தகவலுக்கமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், தலா 25,000 ரூபா பெறுமதியான சரீரப்பிணைகளில் விடுவிக்கப்பட்டனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW