ஊடக சந்திப்பில் மைத்திரியை விமர்சிக்கத் தயாராகும் U.N.P.: ஐ.தே.க. – ஜனாதிபதி தேன் நிலவு முடிவுக்கு வருகிறது..? கொழும்பு கொதிக்கிறது

ஜனாதிபதி நேற்று வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் ஊடக சந்திப்பை நடத்தி விடயங்களை தெளிவுபடுத்த ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஊடக சந்திப்பில் ஜனாதிபதி கருத்து மற்றும் செயல் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
அடுத்த வரும் நாள் ஒன்றில் நடத்தப்படும் இந்த ஊடக சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணி தலைவர்கள் சிலர் கலந்து கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.
குற்றப் புலனாய்வு திணைக்களம், பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு, லஞ்ச ஆணைக்குழு என்பவற்றின் நடவடிக்கைகளில் அரசியல் நோக்கம் இருப்பதாக ஜனாதிபதி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது