சகல பொலீஸ் நிலையங்களையும் உஷார் நிலையில் இருக்குமாறு ஜனாதிபதி உத்தரவு..!!
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாடு முழுவதிலும் உள்ள சகல பொலிஸ் பிரிவுகளையும் இன்று மாலை 6 மணி முதல் தயார் நிலையில் இருக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக சிங்கள இணைய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இது குறித்து நாடு முழுவதிலும் உள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் விடுமுறையில் சென்ற பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
எந்தவொரு அவசரமான நிலைமையாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ள தயராக இருக்கும் வகையில் ஜனாதிபதியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்திற்குள் காணப்படும் அரசியல் போராட்டமே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் ஜனாதிபதியின் இந்த உத்தரவு தொடர்பாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு எந்த அறிக்கைகளையும் வெளியிடவில்லை..