திருகோணமலையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 மீனவர்கள் கைது முள்ளிநியூஸ்

திருகோணமலையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 மீனவர்கள் கைது




திருகோணமலை ஜயா நகர் கடற் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (28) அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சட்டவிரோத மீன்பிடிக்கு பயன்படுத்தப்பட்ட 2 படகுகளும், வலைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

புல்மோட்டையை சேர்ந்த 9 பேரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் சந்தேகநபர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW