மட்டக்குளியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் உயிரிழந்தமை தொடர்பில் மேலும் இருவர் கைது

கொழும்பு – 15 மட்டக்குளி பகுதியில் நான்கு பேர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை தொடர்பில் மேலும் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் சந்தேகநபர்கள் நேற்று (27) இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் இன்று (28) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்குளி சமி்ட்புர பகுதியில் சிலரால் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 13 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.